மாநில செய்திகள்

சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Thirteen veterinary college students in Chennai have been diagnosed with corona infection

சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோன்று கடந்த 1ந்தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறப்பது என அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது.  இதனை முன்னிட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

எனினும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
2. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக குறைந்து உள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று குறைவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,218 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.95 லட்சமாக உள்ளது.