மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு! + "||" + In Tamil Nadu, 1,693 new cases of corona have been reported in the last 24 hours

தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,658 ஆக பதிவான நிலையில் இன்று 1,693 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,693  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,40,361 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேர் (அரசு மருத்துவமனை 17, தனியார் மருத்துவமனை - 8) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,271 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,548 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,88,334  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 16,756 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,53,721 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

கோவை - 206, சென்னை - 202, செங்கல்பட்டு - 135, ஈரோடு - 134, திருப்பூர் - 110, தஞ்சாவூர் - 108, 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,058- பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
4. தமிழகத்தில் 1,200க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,192 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.