மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து தமிழகம் வந்த புதிய கவர்னர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு + "||" + New Governor from Delhi to Chennai: Welcome by First Minister MK Stalin

டெல்லியில் இருந்து தமிழகம் வந்த புதிய கவர்னர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

டெல்லியில் இருந்து தமிழகம் வந்த புதிய கவர்னர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
டெல்லியில் இருந்து சென்னை வந்த புதிய கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
சென்னை, 

தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வரவேற்பு அளித்தார். முதல்-அமைச்சருடன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோரும், தலைமைச் செயலர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தமிழகத்தின் புதிய கவர்னராக அவர் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கனமழையால் கட்டுக்குள் வந்த காற்று மாசு
டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
3. டெல்லியில் இன்று 36 பேருக்கு கொரோனா; 11 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 322 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 320 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. டெல்லியில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது
டெல்லியில் இன்று காலை முதல் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.