மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் + "||" + 20 day protest against the central government throughout Tamil Nadu: DMK Report

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் வருகிற 20ந்தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தெரிவித்து உள்ளது.
சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, வருகிற 20ந்தேதி காலை 10 மணியளவில் தி.மு.க. நிர்வாகிகள், தங்களின் இல்லம் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டன போராட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்றும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மீனவர் பாதுகாப்பில் உள்ள சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
மீனவர் பாதுகாப்பில் உள்ள சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.
2. விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று திருமாவளவன் அறிக்கை
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று திருமாவளவன் அறிக்கை.
4. உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. பெற்றுள்ள வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
5. கருகப்பூலாம்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்