மாநில செய்திகள்

தந்தை பெரியார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை + "||" + TN CM MK Stalin Pays Tribute to Thanthai Periyar

தந்தை பெரியார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை,

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், ‘சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. ‘இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்’ மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைக்க வேண்டும்
இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி மலரும். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
3. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்
தொழில்முனைவோர்களை உருவாக்கும் மேலாண்மை நிறுவனங்கள் பெருக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. பள்ளிகளை திறக்ககோரி சிறுமி கடிதம்: போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிகளை திறக்ககோரி சிறுமி எழுதிய கடிதம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
5. ‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
‘நீட்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.