'சமநிலை சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம்' - மு.க.ஸ்டாலின் டுவிட்


சமநிலை சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் - மு.க.ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 17 Sep 2021 7:00 AM GMT (Updated: 17 Sep 2021 7:21 AM GMT)

சமநிலை சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை, 

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்து மக்கள் மனங்களிலும் சமூகநீதியை விதைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளான இன்று வணங்குகிறோம். அவர் பிறப்பால்தான் தமிழினம் புதுப்பிறப்பை அடைந்தது. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் ஆனது.

ஒடுக்கப்பட்டோர் ஒளிபெற்றார்கள். பெண்ணினம் மேன்மை அடைந்தது. அத்தகைய பேரொளி பிறந்தநாளில் சமூகநீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடே எடுத்துக் கொண்டது. சமநிலைச் சமூகம் உங்கள் பாதையில் அமைப்போம் அய்யா!’ என பதிவிட்டுள்ளார்.

Next Story