எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை, எல்.முருகன் சந்திப்பு


எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை, எல்.முருகன் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Sep 2021 1:04 PM GMT (Updated: 17 Sep 2021 1:04 PM GMT)

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-வுடன் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது. அதே போல அ.ம.மு.க. கூட்டணியில் இருந்து விலகி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது. இதற்கிடையில் அ.தி.மு.க.-வுடன் பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த சூழலில் இன்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.விற்கு கணிசமான இடங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story