மாநில செய்திகள்

“வடிவேலு காமெடி பாணியில் பேருந்து நிலையத்தைக் காணவில்லை” - சு.வெங்கடேசன் எம்.பி. + "||" + Bus Stand is missing in Vadivelu comedy style S Venkatesan MP

“வடிவேலு காமெடி பாணியில் பேருந்து நிலையத்தைக் காணவில்லை” - சு.வெங்கடேசன் எம்.பி.

“வடிவேலு காமெடி பாணியில் பேருந்து நிலையத்தைக் காணவில்லை” - சு.வெங்கடேசன் எம்.பி.
நடிகர் வடிவேலு நடித்த காமெடி காட்சி பாணியில் பேருந்து நிலையத்தைக் காணவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரை,

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அண்ணா மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நடந்த தவறுகள், அதனை எப்படி சரிசெய்யலாம் என்பன உள்ளிட்ட விவாதங்களும், ஆலோசனைகளும் செய்யப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., 2 பேருந்து நிலையங்கள் இருந்த இடத்தில் ஒன்றை காணோம் என நடிகர் வடிவேலு நடித்த காமெடி காட்சி பாணியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். 

பெரியார் பேருந்து நிலையம் நகரமைப்பு அனுமதியே இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தால் ஏற்கெனவே இருந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் வணிக நோக்கத்திற்காக அழிக்கப்பட்டு மேலும் நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.