தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை சங்கடத்தை ஏற்படுத்துகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை சங்கடத்தை ஏற்படுத்துகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 17 Sep 2021 5:54 PM GMT (Updated: 2021-09-17T23:25:34+05:30)

நோய்த்தொற்று காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை சங்கடத்தை ஏற்படுத்துகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

சென்னை, 

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில்  நிருபர்களிடம் கூறியதாவது:-

9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வரும்போது முககவசம் அணியாமல் இருந்தாலோ அல்லது அது கிழிந்துவிட்டாலோ அவர்களுக்கு பள்ளி மூலம் முககவசம் வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 2 முதல் 3 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள். கடந்த 3 மாதங்களாக அவர்களில் பலர் பொருளாதார சிக்கல்களை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன. தற்போதைய நோய்த்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களை கைவிட்டுவிடாதீர்கள் என்று தனியார் பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வரலாறு, அறிவியல் ஆசிரியர் பெயிண்டராகவும், பேக்கரியில் வேலைபார்ப்பதாகவும் கூறுவது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதுபோல் அதிகபடியான ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் இருந்தால், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story