மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்


மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Sep 2021 7:14 PM GMT (Updated: 17 Sep 2021 7:14 PM GMT)

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் போதைக்கு அடிமையாகி மின்வாரிய பணியாளர் தற்கொலை டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியை சேர்ந்த மின்சார வாரிய பணியாளர் இளையராஜா (வயது 32) மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாததால் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டிய இளைஞர் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்திருப்பது வேதனையளிக்கிறது.

அவர், ‘குடி குடியை கெடுக்கும் என்பதால் எவரும் மதுவுக்கு அடிமையாகி சீரழியாதீர்கள்‘ என்று கடிதம் எழுதி மன்றாடியுள்ளார்.

தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால் உடனடியாகவோ, இல்லாவிட்டால் படிப்படியாகவோ, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மதுபோதைக்கு அடிமையானவர்களை மீட்க தமிழகம் முழுவதும் போதை மீட்பு சிறப்பு மையங்களை அமைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story