எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்


எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2021 7:18 PM GMT (Updated: 17 Sep 2021 7:18 PM GMT)

எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்.

சென்னை,

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் விஜயபாரதி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்படமுடியாது என கண்டனம் தெரிவித்தது. சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் உள்ள சட்டவிரோத கட்டிடத்தை இடித்துவிட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்க தமிழக அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story