மாநில செய்திகள்

வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சம் கொள்ளை + "||" + ATM by welding. Rs 4 lakh robbery by cutting the machine to pieces

வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சம் கொள்ளை

வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சம் கொள்ளை
வெல்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாவலர் இல்லை.


இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு இந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று வெல்டிங் மிஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு, துண்டாக வெட்டி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் வெல்டிங் மெஷின்மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

ரூ.4 லட்சம் கொள்ளை

விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் நிரப்பப்பட்டதாக ஏ.டி.எம். மைய ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேத்துப்பட்டு தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது
சென்னை சேத்துப்பட்டு தனியார் நிறுவன அலுவலகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளை தொழிலுக்கு வந்தது குறித்து போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
3. நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்த அந்தமானை சேர்ந்தவர் கைது
அண்ணாநகர் நகைக்கடை ஊழியரை வீட்டிற்கு வரவழைத்து நூதன முறையில் மோசடி செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பிய அந்தமானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
4. அச்சரப்பாக்கத்தில் துணிகரம் பேராசிரியர் வீட்டில் 104 பவுன் நகை-பணம் கொள்ளை
அச்சரப்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 104 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
5. பில்லி-சூனியம் எடுப்பதாக பெண்களிடம் ரூ. 80 லட்சம் மோசடி
பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி 3 பெண்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தில் சொகுசு பங்களா கட்டி வசித்தது விசாரணையில் தெரியவந்தது.