மாநில செய்திகள்

சென்னையில் பயங்கரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை + "||" + Terror in Chennai: The murder of a young girl by putting a stone on her head

சென்னையில் பயங்கரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை

சென்னையில் பயங்கரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை
நடத்தையில் சந்தேகப்பட்டு அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கிராண்டிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் கனிமொழி (20). இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுப்பிரமணிக்கும், கனிமொழிக்கும் 15 வயது வித்தியாசம் இருந்தது. இந்த வயது வித்தியாசம் இவர்களது இல்லற வாழ்க்கையிலும் புயலை உண்டாக்கியது. சுப்பிரமணி, மனைவி கனிமொழியின் நடவடிக்கைகளில் எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.


கனிமொழி ஐஸ்-அவுஸ் பகுதியில் உள்ள தனது தாயார் நிர்மலா வீட்டுக்கு வந்து வாழ்ந்தார். சுப்பிரமணியும் சென்னை வடபழனிக்கு வந்து கொத்தனார் வேலை செய்து பிழைத்து வந்தார்.

சேர்ந்து வாழ மறுப்பு..

சுப்பிரமணி தான் வேலை செய்த கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே வாழ்ந்தார். மனைவி கனிமொழியை தன்னோடு வந்து வாழ்க்கை நடத்தும்படி அடிக்கடி சுப்பிரமணி வற்புறுத்தி வந்தார். தனியாக வீடு வாடகைக்கு எடுத்தால் சேர்ந்து வாழ்வதாக கனிமொழி தெரிவித்தார்.

ஆனால் சுப்பிரமணி வீடு எதையும் வாடகைக்கு எடுக்கவில்லை. இதனால் அவருடன் சேர்ந்து வாழ கனிமொழி மறுத்ததாக தெரிகிறது.

படுகொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கனிமொழி அவரது தாயார் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, கனிமொழியின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் கனிமொழி பரிதாபமாக இறந்து போனார்.

இது தொடர்பாக ஐஸ்-அவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சரவணன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம், ஐஸ்-அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா பிரமுகர் படுகொலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வெறிச்செயல்
தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
2. பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
3. ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டுப்பாடி போலீசார் முன்பு நடனமாடி இளம்பெண் ரகளை
முககவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால், ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடி, ரெயில்வே போலீசார் முன்பு நடனமாடி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணால் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
4. வடலூர் அருகே பரபரப்பு இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்
வடலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
5. கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில இளம்பெண் தீ்க்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.