மாநில செய்திகள்

தமிழகத்தின் 15-வது கவர்னராக இன்று பொறுப்பு ஏற்கிறார் ஆர்.என்.ரவி + "||" + RN Ravi assumes charge as the 15th Governor of Tamil Nadu today

தமிழகத்தின் 15-வது கவர்னராக இன்று பொறுப்பு ஏற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் 15-வது கவர்னராக இன்று பொறுப்பு ஏற்கிறார் ஆர்.என்.ரவி
தமிழகத்தின் 15-வது கவர்னராக ஆர்.என்.ரவி, இன்று காலை பதவியேற்க உள்ளார்.
சென்னை,

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நாகலாந்து மாநில கவர்னராக 2019-ம் ஆண்டு பொறுப்பேற்றார். நாகலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்.என்.ரவி முக்கிய பங்கு வகித்தவர்.

தமிழகத்தின் 15-வது கவர்னராக ஆர்.என்.ரவி, இன்று பொறுப்பு ஏற்க உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். 

இந்தநிலையில்  சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. ஆர்.என்.ரவிக்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில், மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளார்.
2. தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்பு
தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக்கொண்டார்