மாநில செய்திகள்

சென்னை: திருமண மண்டபத்தில் வெடித்துச் சிதறிய மின்சாரப்பெட்டி- மயங்கி விழுந்த மணமகள் + "||" + Chennai: An electric box exploded in the wedding hall - the bride fainted

சென்னை: திருமண மண்டபத்தில் வெடித்துச் சிதறிய மின்சாரப்பெட்டி- மயங்கி விழுந்த மணமகள்

சென்னை: திருமண மண்டபத்தில் வெடித்துச் சிதறிய மின்சாரப்பெட்டி- மயங்கி விழுந்த மணமகள்
திருமண மண்டபத்தில் மின்சாரப் பெட்டி திடீர் என வெடித்துச் சிதறியது. இதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
சென்னை

சென்னை வியாசர்பாடியில், திருமண மண்டபத்தில், மின்கசிவு காரணமாக மின்சாரப் பெட்டி வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேரமாக மின் இணைப்பு சரி செய்யவில்லை எனக்கூறி, மணமக்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வி சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மின்கசிவு காரணமாக அங்குள்ள மின்சாரப் பெட்டி  திடீர் என வெடித்துச் சிதறியது.  இதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் மண்டபத்தில் மின் இணைப்பை சரி செய்ய மணமக்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இரண்டு மணி நேரமாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை எனக்கூறி, வியாசர்பாடி-மூலக்கடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணமகனின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதே போல, மணமகளும் மயங்கி விழுந்ததால், இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்தானது. 

தகவலறிந்து வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.1.21 கோடி கட்ட தவறியதால் மதுவந்தியின் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல்...
பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டி பணம் கட்டச் சொல்லியும் பணம் கட்டாமல் மதுவந்தி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
2. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை...! காதல் விவகாரமா...?
கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.
3. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை
தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
4. மெட்ரோ ரெயில் பணிகள்:கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் நாளை முதல் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்..!
கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. சென்னை வண்ணாரபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விபத்து
மழைநீர் சேகரிப்பு குழாய் சீரமைப்பில் மண் சரிந்து விழுந்தது இதில் 3 பேர் சிக்கி கொண்டனர். இதில் 2 பேர் மீட்கப்பட்டனர்.