மாநில செய்திகள்

சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி + "||" + Chennai Case against land acquisition dismissed in High Court

சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை,

கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் 60 கி.மீ. தூரத்திற்கான வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் முதற்கட்டமாக வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை 29 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், நெடுஞ்சாலை சட்டத்தை பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நிலம் கையகப்படுத்தும் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை ரூ.102 ஆக உயர்வு!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. 19 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து சீரடிக்கு நேரடி விமான சேவை
மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் இருப்பதால், அங்குள்ள சீரடி விமான நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
3. சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை; இன்றும் மழை நீடிக்கும் என ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் (திங்கட்கிழமை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
5. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.