தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு


தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
x
தினத்தந்தி 18 Sep 2021 2:05 PM GMT (Updated: 18 Sep 2021 2:17 PM GMT)

தமிழகத்தில் நேற்று 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,653- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - தமிழகத்தில் மேலும் 1,653- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 43 ஆயிரத்து 683- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,581- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 56 ஆயிரத்து 175 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,893- ஆக உள்ளது. 

Next Story