மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு + "||" + Hevay Rain expected in 4 districts in TN

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில்  4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்  சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை!
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் தொடர் கனமழை: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
3. கேரளாவில் பலத்த மழை: மீட்பு பணியில் ராணுவம், விமானப்படை.. !
கோட்டயம், பத்தினம் திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. “தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்” - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை
பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் இந்திராநகரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 10 வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மெஜஸ்டிக் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே மேம்பால சுவரும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு உண்டானது.