மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை + "||" + Local elections: AIADMK-BJP talks

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவகள் நாளை பதவி ஏற்பு
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவகள் அந்தந்த ஊராட்சிகளில் நாளை பதவி ஏற்க உள்ளனர்.
2. “உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி” - கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகலுக்குள் முழுமையான முடிவுகள் - மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரம் பிற்பகலுக்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4. உள்ளாட்சித் தேர்தல் 2-ம் கட்ட பிரச்சாரம் : இன்று மாலையுடன் நிறைவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
5. உள்ளாட்சித் தேர்தல்: "பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்" - மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.