படகில் பயணம் செய்து முத்துக்குடா பகுதியை ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்


படகில் பயணம் செய்து முத்துக்குடா பகுதியை ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர்
x
தினத்தந்தி 19 Sep 2021 10:36 AM GMT (Updated: 19 Sep 2021 10:36 AM GMT)

புதுகோட்டை முத்துக்குடா பகுதியை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அதிகாரிகளுடன் படகில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை,

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் மதிப்பை உணர்த்தும் வகையில் சர்வதேச அளவில் ஆண்டு தோறும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கடல் பகுதியில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அதிகாரிகளுடன் படகில் சென்று முன்னேற்பாடு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். முத்துக்குடா பகுதியில் சுற்றுலா தளம் அமைத்து அப்பகுதியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆட்சியர் கவிதா ராமு நாட்டுப் படகு மூலம் சென்று அப்பகுதியை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அறந்தாங்கி கோட்டாட்சியர், மீன்வளம், சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Next Story