மாநில செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல் + "||" + 30 lakh sea cards seized for trying to smuggle into Sri Lanka

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நின்றது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நின்றது. தகவல் அறிந்த வனத்துறையினரும், இந்திய கடலோர காவல்படையினரும் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் அங்கு சென்றனர். அதற்குள் படகில் இருந்த சிலர் கடலில் குதித்து நீந்தி தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகின்றது.


அந்த படகில் சுமார் 130 சாக்கு மூட்டைகளில் இறந்த 1,500 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினரும், வனத்துறையினரும் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் நாட்டு படகையும் வனத்துறை அதிகாரிகள் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய்ஆனந்த் உத்தரவின் பேரில் அந்த கடல் அட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்துக்கு சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் மற்றும் 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
3. மேல்மருவத்தூரில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள் பறிமுதல்
மேல்மருவத்தூரில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
5. பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரளா, மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.