மாநில செய்திகள்

"தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + "Chance of heavy rain in Tamil Nadu till the 24th" - Chennai Meteorological Center information

"தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு"  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். காடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 21: வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழையும், காடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 22: வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 23: டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 24: டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. “தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்” - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
5. தமிழகத்தில் 2631 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே - யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் 2631 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்படுகின்றன என யுனெஸ்கோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது