சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்


சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 20 Sep 2021 7:12 PM GMT (Updated: 2021-09-21T00:42:32+05:30)

சென்னையில் 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி இன்று போடலாம் மாநகராட்சி தகவல்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் தவணை ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட வேண்டிய நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகராட்சியின் 200 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையலாம். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 200 வார்டுகளில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களை, பொதுமக்கள் http://cov-id19.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in/cov-id/gccvaccinecentre என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story