மாநில செய்திகள்

மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் + "||" + Fraud case: Minister Senthilpalaji to appear in person

மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும்

மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும்
மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு.
சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்துவரும் செந்தில்பாலாஜி, கடந்த 2011-2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.


இந்த புகார் தொடர்பாக செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின்பு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்துவருகிறது. நேற்று அந்த வழக்கு நீதிபதி ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை.

அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில்பாலாஜி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. போதை பொருள் விவகாரம்; நடிகை அனன்யா பாண்டே நாளை ஆஜராக உத்தரவு
நடிகை அனன்யா பாண்டேவை நாளை காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதை பொருள் தடுப்பு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
2. பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பணி விதிகளின்படி நியமிக்கப்படும் அர்ச்சகர்களின் பணி நியமனம், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது அர்ச்சகர் நியமனத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
3. மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வௌிவந்து தலைமறைவானவருக்கு ஆயுள் தண்டனை
மூதாட்டி கொலையில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தபோது தலைமறைவானவருக்கு ஈரோடு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
4. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
5. ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.