மாநில செய்திகள்

கல் அரைக்கும் கிரஷர் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு + "||" + ICC refuses to lift ban on Pollution Control Board order regarding stone crusher

கல் அரைக்கும் கிரஷர் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு

கல் அரைக்கும் கிரஷர் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
கல் அரைக்கும் கிரஷர் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

பாறைகளை ஜல்லிகளாக உடைக்கும் கிரஷர் கல் அரவை யூனிட்டுகளால் ஏற்படும் காற்று மாசைத் தடுக்க கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நிபந்தனைகளைக் கொண்டு வந்தது. அதன்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், புனித ஸ்தலங்கள், குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் ‘கல் அரைக்கும் கிரஷர் யூனிட்டுகள்’ அமைக்கக்கூடாது. 2 யூனிட்டுகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.


இடைக்கால தடை

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிதாக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பத் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த 2019-ம் ஆண்டு விசாரித்த ஐகோர்ட்டு, ஒரு கி.மீ. தூரத்துக்குள் 2 கல் அரைக்கும் கிரஷர் யூனிட்டுகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

அவகாசம்

அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவுக்கு உட்பட்ட 2 கிராமங்களில் சட்டவிரோதமாக பள்ளிக்கு அருகில் கல் குவாரிகள் செயல்படுவதாக சின்னண்ணா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான நீரி அமைப்பின் ஆய்வுக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் தேவை எனவும் கூறினார்.

நீக்க முடியாது

சின்னண்ணா தொடர்ந்த வழக்கில், ‘சட்டவிரோத குவாரி பணிகளில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிய குவாரிகளின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க முடியாது. குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை டிசம்பர் 2-வது வாரத் துக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு: மாற்றுத்திட்டம் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு: மாற்றுத்திட்டம் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
2. அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்.
3. பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பணி விதிகளின்படி நியமிக்கப்படும் அர்ச்சகர்களின் பணி நியமனம், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது அர்ச்சகர் நியமனத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு
ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு.
5. ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.