மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + 6 Union Councilors sacked from AIADMK O. Panneerselvam, Edappadi Palanisamy Announcement

ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினாலும், ஊராட்சி ஒன்றியக்குழு 1-வது வார்டு உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன், 3-வது வார்டு உறுப்பினர் பி.எஸ்.அந்தோணி, 4-வது வார்டு உறுப்பினர் கே.மூக்கம்மாள், 5-வது வார்டு உறுப்பினர் ஜி.அறிவழகன், 6-வது வார்டு உறுப்பினர் ஆர்.செல்வி, 7-வது வார்டு உறுப்பினர் எம்.கலைச்செல்வி,


ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர் ஆர்.சந்திரசேகரன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் ஆர்.பிரசாத், டி.கெப்புராஜ் ஆகியோர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் டாஸ்மாக் ஊழியர் படுகொலை; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை சம்பவத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
3. மதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசுகள்... அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் செல்போன், வாஷிங் மெஷின் போன்ற பரிசுகளை மதுரை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
4. சிவகார்த்திகேயன் இன்றி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உருவாகும் - இயக்குனர் பொன்ராம் அறிவிப்பு
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.
5. தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதி மக்களவை இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
நாடாளுமன்ற மக்களவைக்கான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.