மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Natham Viswanathan ordered to file case against victory in election

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,

தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலத்தைவிட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நத்தம் விஸ்வநாதனின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆண்டி அம்பலம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளார்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.சேஷசாயி நேற்று விசாரித்தார். பின்னர், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் 6 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு: மாற்றுத்திட்டம் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு: மாற்றுத்திட்டம் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
2. அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்.
3. போதை பொருள் விவகாரம்; நடிகை அனன்யா பாண்டே நாளை ஆஜராக உத்தரவு
நடிகை அனன்யா பாண்டேவை நாளை காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போதை பொருள் தடுப்பு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
4. பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பணி விதிகளின்படி நியமிக்கப்படும் அர்ச்சகர்களின் பணி நியமனம், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது அர்ச்சகர் நியமனத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
5. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.