மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் + "||" + State elections; DMK candidates file nominations in the presence of First Minister MK Stalin

மாநிலங்களவை தேர்தல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை  இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9-ம் தேதி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

வேட்புமனு தாக்கல் செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இரண்டு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேர்தல்: புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு
புதுச்சேரி பா.ஜனதா பொருளாளராக உள்ள செல்வகணபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
2. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3. மாநிலங்களவை திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிப்பு
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.