ஜவ்வாது மலையில் கனமழை - பீமன் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை


ஜவ்வாது மலையில் கனமழை - பீமன் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை
x
தினத்தந்தி 21 Sep 2021 4:55 PM GMT (Updated: 21 Sep 2021 4:55 PM GMT)

கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஜவ்வாது மலையில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஜவ்வாது மலையில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. 

இதனால் ஜவ்வாது மலையின் மைய பகுதியான ஜம்னாமத்தூருக்கு அருகே அமைந்துள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காரணமாக பீமன் நீர்விழ்ச்சிக்கு மக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story