மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு + "||" + TN Covid 19 Updates on sep 22

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று  கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,682- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,627- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 51 ஆயிரத்து 60 மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,027 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,400 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
2. பிரபல நடிகைக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
பிரபல நடிகைக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3. கொரோனா பாதிப்பு; குணமடைந்தோர் எண்ணிக்கை 98% ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98% ஆக உயர்ந்து உள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.