மாநில செய்திகள்

குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு + "||" + Food Safety Department instructed officers to inspect the quality of soft drinks

குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

தரமற்ற குளிர்பானங்களை குடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், சென்னை முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பான மாதிரிகளை சேகரித்து அதன் தரத்தை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

அந்த உத்தரவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாத குளிர்பானங்களை பறிமுதல் செய்யவும், குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் சான்றிதழ்களை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்டோர் குளிர்பானங்களை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும்பொழுது அவை தரமானதாக உள்ளதா எனவும், FSSAI குறியீடு உள்ளதா, காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதா எனவும் சரிபார்த்து வாங்க வேண்டும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்களோ, கடைகளோ இருந்தால் முதல் முறை எச்சரிக்கையும், 2-வது முறை பறிமுதலும், 3-வது முறை தவறு தொடர்ந்தால் சிறை தண்டனை வரை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
2. கீழடியில் அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு குழிகள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அந்த குழிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
3. சிவகங்கை கீழடி அகழ் வைப்பக பணிகள்; அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு தளங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
4. தமிழகத்தில் 20, 21-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சில இடங்களில் 20 மற்றும் 21-ந்தேதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
5. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நாய்கள் இறந்தது குறித்து இயக்குனர், பதிவாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.