மாநில செய்திகள்

77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து + "||" + 77th Birthday: MK Stalin's Greetings to Vaiko

77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

வைகோ பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும், நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும், கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர் சகோதரர் வைகோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது சொல்லும், செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்“ என்று கூறியுள்ளார்.


இதேபோல அமைச்சர் துரைமுருகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
3. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
4. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
5. ‘அனைத்து விவசாயிகளும் பயிரை காப்பீடு செய்யுங்கள்’ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அனைத்து விவசாயிகளும் தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.