மாநில செய்திகள்

"நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு + "||" + I could have sued as much as I thought I could Edappadi Palanisamy

"நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு

"நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பத்தூர்,

.திருப்பத்தூரில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.அப்போது பழனிசாமி பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது. 

அக்கட்சி அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களவை தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது.

சட்டசபை தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை அறிவித்தது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என அறிவித்து, அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்ததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும்.  நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க.வின் பொன் விழாவையொட்டி பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
2. உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஐகோர்ட்டு உத்தரவை தேர்தல் ஆணையம் முழுமையாக நிறைவேற்றி உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
3. தி.மு.க. பொறுப்பேற்ற 5 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. பொறுப்பேற்ற 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. ‘ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தி.மு.க. வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை’ என காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.