மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை + "||" + Kodanadu case - personal inquiry

கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை

கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை அதிகாரிகளின் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 மற்றும் 9வது நபர்களாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் தனிப்படை போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இருவரிடமும் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சந்திர சேகர், சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சதீஷன், பிஜின் குட்டி ஆகியோர் விசாரணைக்கு ஆஜர் ஆனார்கள்.

ஏற்கனவே, 29 பேர் விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றச்சாட்டப்பட்டோரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொடநாடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு
கொடநாடு விவகாரத்தில், வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று புலன் விசாரணைக்குழு மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.