மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் + "||" + When are the 1st to 8th schools open in Tamil Nadu? - Minister Anbil Mahesh PoyyaMozhi information

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை,

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1 முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

"தமிழகத்தில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர்.

ஆனால், பெற்றோர்கள் மத்தியில் கொரோனா தொற்று அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 -க்கு கீழ் குறைந்தது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிபா மற்றும் ஜிகா வைரஸ் பரவலை தமிழகத்தில் பரவாத வண்ணம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.