மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சிவலிங்கம் கண்டெடுப்பு


மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சிவலிங்கம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 5:05 PM GMT (Updated: 23 Sep 2021 5:05 PM GMT)

மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சதுஸ்ர வடிவ சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

மதுரை,

மதுரை தெப்பக்குளம் முதல் வீரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று இரவு ஐராவதநல்லூர் இந்திராகாந்தி சிலை அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதற்காக கொந்தகை கால்வாய் பகுதியில் உள்ள சாலையை தோண்டிய போது, 2 அடி உயரம் உள்ள சதுஸ்ர லிங்க சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையானது மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இதனை ஆய்வுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சதுஸ்ர வடிவ சிவலிங்க வழிபாடு 10 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த சிவலிங்கம் அந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story