சென்னையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள்: 3 மணி நேரத்தில் ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு


சென்னையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள்: 3 மணி நேரத்தில் ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2021 5:28 PM GMT (Updated: 23 Sep 2021 5:28 PM GMT)

சென்னை திருவொற்றியூரில் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை எண்ணூர் கடற்கரை விரைவுச்சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அதிக பாரங்களை ஏற்றி வந்த லாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் 3 மணி நேரத்தில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 7 லட்சம் ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறிய வாகனங்கள், மஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு காலியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story