மாநில செய்திகள்

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி + "||" + For the last 10 years the AIADMK Interview with the Minister that the regime has created a situation of bribery

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலங்காயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இந்த மாவட்டத்தில் மணல் குவாரி என்று ஒன்று இல்லை. அப்படி இருந்தால் ரசீது இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைத்தனர். அப்போது அதனை பழிவாங்கவில்லை என்றார்கள். இப்போது நாங்கள் தொட்டால் பழிவாங்குவதாக கூறுகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பணியிட மாறுதலுக்கு எவ்வளவு வாங்கினார்கள்?, எத்தனை லட்சம் வாங்கினார்கள்?, என்ன செய்தார்கள்? என்று அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.

அ.தி.மு.க.வினர் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிலம்பரசன் நடித்த படத்தை தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் டி.ராஜேந்தர் மனைவி உஷா பேட்டி
சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படத்தை தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று டி.ராஜேந்தருடன் இணைந்து உஷா ராஜேந்தர் பேட்டி கொடுத்தார்.
2. சென்னை முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
2015-ம் ஆண்டு கனமழையில் சென்னை தத்தளித்த நிலை மீண்டும் வராத வகையில், நகரம் முழுவதும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
3. தமிழகத்தில் மின்தடை இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தடைகள் இல்லாத அளவுக்கு மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
4. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
5. ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.