மாநில செய்திகள்

பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் + "||" + Poet Lena Manimegalai's case notice issued against passport freeze

பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்.
சென்னை,

திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை பாலியல் புகார் சுமத்தினார். இதையடுத்து லீனா மணிமேகலைக்கு எதிராக, சுசிகணேசன் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி முடக்கி உத்தரவிட்டுள்ளனர்.


இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், லீனா மணிமேகலை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, “ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு மனுதாரர் செல்ல உள்ளதால், பாஸ்போர்ட்டை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கிற்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாஸ்போர்ட் மண்டல அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு
ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு.
2. ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
3. கோவில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்காதது ஏன்? அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
கோவில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்காதது ஏன்? என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் கூடாது அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிகாரிகள் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிடத் தடை
பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிடத் தடை ஐகோர்ட்டு உத்தரவு.