தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா? ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா? ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Sep 2021 10:54 PM GMT (Updated: 23 Sep 2021 10:54 PM GMT)

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா? என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

எங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை திட்டமோ, ரேஷன் கடையோ, சமுதாய நலக்கூடமோ இல்லை. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், முன்னாள் மக்களவை துணைத்தலைவருமான தம்பிதுரைக்கு சொந்தமான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கான மின்சார துணை நிலையம், பாதை, மாணவ, மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த கல்வி மையத்துக்கு அருகில் உள்ள ஆவடி நகராட்சி உயர் நிலைப்பள்ளி கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் நகராட்சி பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக விளையாட்டு மைதானமோ, ஆய்வகமோ, நூலக வசதிகளோ இல்லை. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிலையம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும். அவற்றை ஆவடி நகராட்சி உயர் நிலைப்பள்ளியின் மேம்பாட்டுக்காக வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

அறிக்கை

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி நிர்வாகம் சார்பில், தங்களுக்கு எந்தவொரு நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அனைத்து தரப்புக்கும் மாவட்ட வருவாய் அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலங்களை அளவிட வேண்டும். இந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்து, 3 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story