மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்


மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
x
தினத்தந்தி 24 Sep 2021 12:09 AM GMT (Updated: 24 Sep 2021 12:09 AM GMT)

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்

சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான 2 காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுக்கள் இறுதி நாளான 22-ந் தேதிவரை தாக்கல் செய்யப்பட்டன.

தி.மு.க. சார்பில் டாக்டர் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 3 சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அதில், தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி, சோமு, ராஜேஷ்குமார் வேட்பு மனுக்கள் செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது.

3 சுயேச்சை வேட்பாளர்களான ந.அக்னி ஸ்ரீராமசந்திரன், கு.பத்மராஜன், சா.புஷ்பராஜ் ஆகியோரால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த அறிவிப்பின்படி 2 காலியிடங்களுக்கும் தலா ஒரு வேட்பாளரே களத்தில் உள்ளார். எனவே போட்டி இல்லை என்பதால், வாக்குப்பதிவு நடைபெறாது. 27-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும்.

தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேரும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால், 27-ந் தேதியன்று அவர்கள் 2 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கான சான்றிதழை 27-ந் தேதி பிற்பகலில் தேர்தல் நடத்தும் அதிகாரி கி.சீனிவாசன் வழங்குவார்.

Next Story