மாநில செய்திகள்

பள்ளிகளை திறந்ததும் சத்துணவு திட்டத்தை தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு + "||" + ICourt order to start nutrition program after opening schools

பள்ளிகளை திறந்ததும் சத்துணவு திட்டத்தை தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளை திறந்ததும் சத்துணவு திட்டத்தை தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிகளை திறந்ததும் சத்துணவு திட்டத்தை தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக்கோரி ‘சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப்’ என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏற்கனவே பல இடைக்கால உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்தது.


இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன’ என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
2. ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு
ஐகோர்ட்டு புதிய நீதிபதிகள் நாளை பதவி ஏற்பு.
3. ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
4. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு.
5. கோவில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்காதது ஏன்? அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
கோவில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்காதது ஏன்? என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.