மாநில செய்திகள்

சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு பதவி உயர்வு + "||" + Sankarjiwal promotes 5 additional police DGPs including AK Viswanathan as DGPs

சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு பதவி உயர்வு

சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு பதவி உயர்வு
சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அரசு உத்தரவு.
சென்னை,

தமிழக காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்கள் அந்தஸ்தில் உள்ள 5 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்துள்ளது.

புதிய டி.ஜி.பி.க்கள் 5 பேர் விவரம் வருமாறு:-


1. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். 2.சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். 3.ஆபாஷ்குமார். 4.டி.வி.ரவிச்சந்திரன். 5.சீமாஅகர்வால்.

இவர்கள் அனைவரும் 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் ஆவார்கள். தமிழக காவல்துறையில் தற்போது சைலேந்திரபாபு, பிரதீப் வி.பிலீப், சஞ்சய் அரோரா, கரன்சின்கா, பி.கே.ரவி, சுனில்குமார்சிங், ஷகீல்அக்தர், கந்தசாமி ஆகியோர் டி.ஜி.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் அரோரா அயல் பணியில் உள்ளார். சைலேந்திரபாபு தலைமை டி.ஜி.பி. என்று அழைக்கப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பணி நியமனம் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: அர்ச்சகர் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
புதிய பணி விதிகளின்படி நியமிக்கப்படும் அர்ச்சகர்களின் பணி நியமனம், வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும், தற்போது அர்ச்சகர் நியமனத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
2. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
3. ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஆக்கிரமிப்பில் உள்ள திரிசூலநாதர் கோவில் நிலத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
4. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு.
5. 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழக கோவில்களில் 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.