மாநில செய்திகள்

2 நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை: ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு! + "||" + Income tax audit in 2 financial institutions: Rs. 300 crore tax evasion detection!

2 நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை: ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு!

2 நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை: ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு!
சென்னையில் 2 நிதிநிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ. 300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

சென்னையை சேர்ந்த 2 நிதிநிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இந்த இரண்டு நிறுவனங்களும் தொழிலதிபர்கள்,பெரு நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும், நிதிநிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.