போலீசாரின் அதிரடி சோதனை: 52 மணி நேரத்தில் 3,325 பேர் கைது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Sep 2021 5:19 AM GMT (Updated: 26 Sep 2021 5:19 AM GMT)

'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் 'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 பேர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

மேலும் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 நபர்கள் ஆவர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 972 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டு 2526 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் 7, கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் 1,110 என மொத்தம் 1,117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றஙளில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story