மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்; தேர்தல் ஆணையம் வெளியீடு + "||" + Final list of candidates for rural local elections; Publication by the Election Commission

ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்; தேர்தல் ஆணையம் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்; தேர்தல் ஆணையம் வெளியீடு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ந்தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ந்தேதி தொடங்கியது. இதில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.  வேட்புமனு தாக்கல் கடந்த 22ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்புமனுக்களை திரும்பப்பெற 25ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, 2,981 பதவியிடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  14,571 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர்.  இறுதியாக, 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் போட்டியில் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திர பிரதேச முதல்-மந்திரி தலைமையில் கொரோனா ஆய்வு கூட்டம்; அறிவுறுத்தல் வெளியீடு
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சுகாதார துறையினருடன் இன்று ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
2. மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன?
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
3. இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு
இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
4. மேற்கு வங்காளம்: 9-12 வரையிலான மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் வகுப்புகள்... விவரம் வெளியீடு
மேற்கு வங்காளத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11ம் வகுப்புகளுக்கு வேறொரு 2 நாட்களும் என வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
5. மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசு மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.