மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் + "||" + Corona 3rd wave does not start in Tamil Nadu: Minister Ma. Subramanian

தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை:  அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தஞ்சை,

தஞ்சை மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெற்றது. தஞ்சை அடுத்த முன்னையம்பட்டியில் நடைபெற்ற 3வது மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது என்றார்.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திவிட்டதாக கூறிய அவர், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது ஏற்க இயலாதது என்று தெரிவித்த அமைச்சர், அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி
அசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.
2. உ.பி.: ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம்
உத்தர பிரதேசத்தில் ரூ.34 ஆயிரம் கோடியில் சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.
3. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சந்தித்து பேசினார்.
4. கர்நாடகாவில் 1-5 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு
கர்நாடகாவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
5. உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.