மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Sep 2021 3:43 AM GMT (Updated: 27 Sep 2021 3:43 AM GMT)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று 7,051 கன அடியாக உயர்ந்துள்ளது.

சேலம்,

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையின் காரணமாக,  கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தது. 

இந்நிலையில் இன்று அணையின் நீர்மட்டம் 73.49 அடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,831 கன அடியிலிருந்து 7,051 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 35,77 டி.எம்.சி.யாக உள்ளது.

Next Story