மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2021 1:19 PM GMT (Updated: 28 Sep 2021 1:19 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், பாசத்திற்கான தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இன்று நீர்திறப்பு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 73.49 அடியாக இருந்த நிலையில், இன்று அணையின் நீர் மட்டம் 73.67 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story