மதுரை கோட்டத்தில் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்


மதுரை கோட்டத்தில் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 28 Sep 2021 11:33 PM GMT (Updated: 28 Sep 2021 11:33 PM GMT)

மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி மைசூர்- தூத்துக்குடி சிறப்பு ரெயில்(வண்டி எண் 06236) திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 6.35, 6.55, 7.10, 7.50, 8.05, 8.15, 8.40, 9.05, 9.25, 10 மணிக்கு பதிலாக காலை 6.25, 6.44, 7.00, 7.40, 7.53, 8.05, 8.25, 8.48, 9.15, 9.50 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07236) நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 9.05, 10.05, 10.25, 10.50, நள்ளிரவு 1.10 மணிக்கு பதிலாக 9.00, 9.55, 10.17, 10.40, நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில் பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வ.எண் 07235) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 2.00, 3.00, அதிகாலை 3.40, 4.05, 4.25, காலை 6.15 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.55, 2.55, 3.35, அதிகாலை 3.58, 4.20, 5.50 மணிக்கு புறப்படும்.

நெல்லை-தாதர்

புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வ.எண் 06861) அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் இருந்து இரவு 9.25, 10.15, 10.40, 11.05 மணிக்கு பதிலாக இரவு 9.20, 10.05, 10.28, 10.50 மணிக்கு புறப்படும்.

நெல்லை-தாதர் சிறப்பு ரெயில் (வ.எண் 06072) கோவில்பட்டி, திண்டுக்கல் ரெயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 8.12, 11.05 மணிக்கு பதிலாக காலை 8.10, 11.00 மணிக்கு புறப்படும்.

மறுமார்க்கத்தில், தாதர்-நெல்லை சிறப்பு ரெயில் (வ.எண் 06071) மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 6.05, 6.50 மணிக்கு பதிலாக காலை 6.00, 6.45 மணிக்கு புறப்படும்.

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (வ.எண் 02627) நெல்லையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-கோவை இரவு நேர சிறப்பு ரெயில் (வ.எண் 02668) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து இரவு 11.30, நள்ளிரவு 12.30, 1.15, 2.45 மணிக்கு பதிலாக இரவு 11.25, நள்ளிரவு 12.20, 1.10, 2.30 மணிக்கு புறப்படும்.

ஓகா-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண் 06734) மதுரையிலிருந்து மாலை 3.55 மணிக்கு பதிலாக மாலை 3.50 மணிக்கு புறப்படும்.

பாலக்காடு

ராமேசுவரம் - திருப்பதி சிறப்பு ரெயில் (வ.எண் 06780) மானாமதுரையில் இருந்து மாலை 5.00 மணிக்கு பதிலாக மாலை 4.57 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் திருப்பதி - ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண் 06779) மதுரையிலிருந்து நள்ளிரவு 1.45 மணிக்கு பதிலாக 1.40 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு அதிகாலை 5.10 மணிக்கு பதிலாக அதிகாலை 4.55 மணிக்கு சென்று சேரும்.

பாலக்காடு - சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வ.எண் 02652) திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 7.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல் - பாலக்காடு சிறப்பு ரெயில் (வ.எண் 02651) திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து முறையே காலை 6.15, 6.45, 7.25, 8.05 மணிக்கு பதிலாக காலை 6.05, 6.35, 7.15, 7.55 மணிக்கு புறப்படும்.

பாலக்காடு - நெல்லை பாலருவி சிறப்பு ரெயில் (வ.எண் 06792) கிளிகொல்லூர், கொட்டாரக்கரா, புனலூர் ஆகிய ரெயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 11.45, நள்ளிரவு 12.08, 12.45 மணிக்கு பதிலாக இரவு 11.40, 11.58, நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும்.

மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரெயில் (வ.எண் 06344) பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து மாலை 6.30, இரவு 7.05 மணிக்கு பதிலாக மாலை 6.20, இரவு 7.00 மணிக்கு புறப்படும்.

திண்டுக்கல்

விழுப்புரம்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண் 06867) கொளத்தூர், மணப்பாறை, வையம்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 8.45, 9.00, 9.15 மணிக்கு பதிலாக இரவு 8.37, 8.52, 9.05 மணிக்கு புறப்படும்.

சென்னை-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண் 06157) திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6.45 மணிக்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-மும்பை சிறப்பு ரெயில் (வ.எண் 06352) விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 9.45, 11.10, மதியம் 12.15 மணிக்கு பதிலாக காலை 9.40, 11.00, மதியம் 12.05 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் மும்பை - நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வ.எண் 06351) திண்டுக்கல், நெல்லை ரெயில் நிலையங்களிலிருந்து நள்ளிரவு 1.40, அதிகாலை 5.35 மணிக்குப் பதிலாக 1.35, 5.25 மணிக்கு புறப்படும்.

மதுரை

ஹஸ்ரத் நிஜாமுதீன்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வ.எண் 06012) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 10.40, 11.55, நள்ளிரவு 12.35, 1.00 மணிக்கு பதிலாக இரவு 10.35, 11.50, நள்ளிரவு 12.25, 12.48 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரெயில் (வ.எண் 06011) கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கு புறப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா சிறப்பு ரெயில் (வண்டி எண் 02666) மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே பகல் 11.10, 12.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பகல் 11.00, 12.05 மணிக்கு புறப்படும்.

மதுரை-சண்டிகர் சிறப்பு ரெயில் (வ எண் 02687) திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.35 மணிக்கும், மறுமார்க்கத்தில் சண்டிகர் - மதுரை சிறப்பு ரெயில் (வ எண் 02688) திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக பகல் 12.25 மணிக்கு புறப்படும்.

ஹஸ்ரத் நிஜாமுதீன்- மதுரை சிறப்பு ரெயில் (வ.எண் 06156) திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10.40 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

ராமேசுவரம்

பிகானீர் - மதுரை சிறப்பு ரெயில் (வ.எண் 06054) திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரெயில் நிலைகளில் இருந்து முறையே மாலை 5.05, 5.25 மணிக்கு பதிலாக மாலை 5.00, 5.20 மணிக்கு புறப்படும்.

பனாரஸ் - ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண் 05120) புதுக்கோட்டை, சிவகங்கை ரெயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 5.40, இரவு 7.10 மணிக்கு பதிலாக மாலை 5.15, இரவு 7.05 புறப்பட்டு ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு இரவு 11.00 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு வந்து சேரும்.

புவனேசுவர்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண் 08496) புதுக்கோட்டை, சிவகங்கை ரெயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 5.40, இரவு 7.10 மணிக்கு பதிலாக மாலை 5.15, இரவு 7.05 மணிக்கு புறப்படும்.

Next Story